இந்தியன் - 2 விவகாரம்; இருதரப்பிற்கு அறிவுறுத்திய நீதிமன்றம்

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (17:06 IST)
நடிகர் கமல்ஹாசன்  நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், லைகா நிறுவனம் இயக்கிவரும் படம் இந்தியந்2. கடந்தவருடம் கிரேன் விபத்தால் இப்படத்தின் ஷூட்டிங் தடைப்பட்டது.

இதையடுத்து,  நடிகர் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது.  அதேபோல் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிப்பில் ஒரு படமும், அந்தியன் 2 படத்தி ரன்வீர் சிங்கை வைத்து இந்தியில் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

எனவே இந்தியன்2 படம் எடுக்கப்படுமா என கேள்விகள் எழுந்த நிலையில், லைகா நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இதுகுறித்து லைகா நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், 150 கோடி ரூபாய் பட்ஜெட் திட்டமிட்டிருந்த நிலையில் இப்படம் தற்போது ரூ.236 கோடியைத் தாண்டியுள்ளது. ஆனாலும் தற்போது 80% பணிகளை மட்டுமே ஷங்கர் முடித்துள்ளார். இப்படத்தின் மீதிப்பணிகளை முடிக்கும் வரை பிறபடங்களை அவர் இயக்கத் தடை விதிக்க வேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தது.

ஆனால் நீதிமன்றம் , இருதரப்பு விளக்கங்களையும் கேட்டறிந்த பின், இரு தரப்பினரும் சுமூகமாகப் பேசித் தீர்வுகாணும்படி அறிவுறுத்தியுள்ளார். மேலும் இந்த வழக்கு விசாரணை வரும் 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்