தோனியிடம் இருந்து ’’அதை’’ எதிர்ப்பார்க்கலாம்....- முன்னாள் வீரர் தகவல்

வியாழன், 22 ஏப்ரல் 2021 (17:03 IST)
ஐபிஎல்-2021; 14வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தோனி குறித்து முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடர் ரசிகர்கள் எண்ணத்திற்கு விருந்து வைப்பது போலுள்ளது. அதேசமயம் இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி ஒரு போட்டியில் தோற்றாலும் மற்ற இருமுறை வெற்றி பெற்றுள்ளது.,

நேற்றைய போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை கிங்ஸ் அணி.

இதில், சென்னை அணியின் கேப்டன் தோனி, நேற்று 8 பந்துகளில் 17 ரன்கள் அடித்தார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான கர்வாஸ்கர், ஐபிஎல்-14வது சீசனின் தோனியிடம் இருந்து இன்னும் நிறைய சிக்ஸர்கள் வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்