விவேகம், மெர்சலை மிஞ்ச முடியாத காலா

Webdunia
வியாழன், 7 ஜூன் 2018 (19:03 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்களும் ஒருசில நெகட்டிவ் விமர்சனங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த படம் உலக முழுவதும் 1800 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 
 
இந்த நிலையில் உலகம் முழுவதும் 'காலா' திரைப்படம் அதிக திரையரங்குகளில் வெளியாகி சாதனை புரிந்தாலும் கேரளாவில் அஜித்தின் 'விவேகம்' மற்றும் விஜய்யின் 'மெர்சல்' சாதனையை முறியடிக்க முடியவில்லை.
 
கேரளாவில் இதுவரை வெளியான படங்களில் அதிக திரையரங்குகளில் வெளியான படம் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' படம்தான். இந்த படம் முதல் நாளில் 1370 காட்சிகள் திரையிடப்பட்டன. அதனையடுத்து அஜித்தின் விவேகம் 1316 காட்சிகளும், விஜய்யின் மெர்சல் 1260 காட்சிகளும் முதல் நாளில் திரையிடப்பட்டன
 
ஆனால் ரஜினியின் 'காலா' திரைப்படம் இன்று 1065 காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்டது. ரஜினியின் முந்தைய படமான 'கபாலி' படத்தின் காட்சிகளை  விட இது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்