இமைக்கா நொடிகள் இசை வெளியீட்டு விழாவில் யாரும் கலந்து கொள்ளாதது ஏன்?

Webdunia
வியாழன், 28 ஜூன் 2018 (14:12 IST)
இமைக்கா நொடிகள் இசை வெளியீட்டு விழாவில் யாரும் கலந்து கொள்ளாதது ஏன்? என விளக்கம் அளித்துள்ளார் தயாரிப்பாளர் ஜெயக்குமார்.
 
இமைக்கா நொடிகள் படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. நயன்தாரா, அதர்வா, அனுராக் கஷ்யப் என படத்தில் நடித்த யாருமே இதில் கலந்து கொள்ளவில்லை. அதற்கு என்ன காரணம் எனத் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் ஜெயகுமார்.
 
இந்த படத்தின் நடிகர்கள் ஒவ்வொருவரும் மற்ற படங்களின் வேலைகளில் பிஸியாக இருப்பதால் இங்கு வர முடியவில்லை. இது திடீரென திட்டமிட்ட விழா, இசையமைப்பாளருக்காக தான் இந்த விழாவையே நடத்தியிருக்கிறோம். தனி ஒருவன் படத்தை ஆதியின் பின்னணி இசைக்காகவே 5 முறை பார்த்தவன் நான். 
 
எல்லா நடிகர்களையும் தேர்வு செய்து முடித்த பிறகு இயக்குனர் அஜய், நிறைய செலவு பண்ணிட்டீங்க, சின்ன இசையமைப்பாளரே போதும் என்றார். நான் தான் பரவாயில்லை என்று சொல்லி, ஹிப் ஹாப் தமிழாவை ஒப்பந்தம் செய்தேன். தனி ஒருவன் படத்துக்கு பிறகு ஆதியின் மிகப்பெரிய கமெர்சியல் ஹிட் ஆக இது இருக்கும். 
 
ராஷி கண்ணா படப்பிடிப்பை கேன்சல் செய்து விட்டு எங்களுக்காக இங்கு வந்திருக்கிறார். அவரை போன்ற அர்ப்பணிப்புள்ள நடிகைகளை தமிழ் சினிமா பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திரிஷா இல்லனா நயன்தாரா படத்துக்கு பிறகு அதர்வாவை வைத்து வைத்து ஆக்‌ஷன் படம் எடுக்க திட்டமிட்டிருந்தோம். கொஞ்சம் கொஞ்சமாக படம் பெரிதாகி கொண்டே போனது. 
 
நயன்தாரா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும். கதைக்காக முடியை வெட்டி, தனது தோற்றத்தை மாற்றி மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார். வில்லன் கதாபாத்திரத்துக்கு கௌதம் மேனன் சார் தான் முதலில் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை. அந்த நேரத்தில் தான் அனுராக் காஷ்யாப் நடித்த அகிரா படத்தை பார்க்க நேர்ந்தது. அவரை அணுகினோம், அவரும் ஒப்புக் கொண்டார். 
 
நானும் பெரிய ஆர்டி ராஜசேகர் ரசிகன், அவரை உள்ளே கொண்டு வந்தோம். நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்க ஒரு நடிகர் தேவைப்பட்டார், அதை விஜய் சேதுபதி மட்டுமே செய்ய முடியும். அவர் கதாபாத்திரம் தான் கதையின் முக்கியமான விஷயம். 15 நிமிடம் வந்தாலும் ரசிகர்களை கட்டிப் போட்டு விடுவார். ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கணும்னுதான் இவ்வளவு தாமதம். திரில்லர், எமோஷன், ஆக்‌ஷன் விரும்புபவர்கள் என எல்லோருக்கும் இந்த படம் பிடிக்கும். தனது பட வேலைகளுக்கு நடுவிலும் அனுராக் காஷ்யாப் சாருக்கு டப்பிங் பேசிக் கொடுத்த மகிழ் திருமேனி சாருக்கு நன்றி என்றார் ஜெயக்குமார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்