‘டிமாண்டி காலனி’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து அடுத்ததாக இயக்கிவரும் படம் ‘இமைக்கா நொடிகள்’. நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில், அதர்வா - ராஷி கண்ணா ஜோடியாக நடித்துள்ளனர். அத்துடன், பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப், ரமேஷ் திலக் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில், நயன்தாராவின் கணவராக சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.