''மீண்டு வருகிறேன்''-மருத்துவமனையில் இருந்தபடி புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகர்

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (15:46 IST)
ஹாலிவுட் நடிகர் ஜெர்மி ரென்னர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுகுறித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஹாலிவுட் சினிமாவில்  சூப்பர்ஹீரோ படங்களில் ’ஹாக் ஐ’ என்ற சூப்பர் ஹீரோவாக நடித்தவர் ஜெரெமி ரென்னர். இவர் மிஷன் இம்பாசிபிள் உள்ளிட்ட மேலும் பல ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில், புத்தாண்டு அன்று காரில் சென்றபோது, அவர் பனிப்புயலில் சிக்கி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன்பின்னர், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல் தெரிவித்தது.

தற்போது மருத்துவமனையில் படுக்கையில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை ஜெர்மி ரென்னர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்,'' காலையில் உடற்பயிற்சி, இந்தப் புத்தாண்டு தீர்மானம்  மாறிவிட்டது.இந்த விபத்து என் மொத்த குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மீண்டு வருகிறேன். நான் குணமடைய வாழ்த்திய அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்