பல ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜாவுடன் இணையும் இயக்குனர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Webdunia
சனி, 2 ஜனவரி 2021 (13:10 IST)
இயக்குனர் சாய் வசந்த் இயக்கும் புதிய படத்துக்கு இளையராஜா இசையமைக்க உள்ளார்.

கே பாலச்சந்தரின் உதவி இயக்குனராக இருந்தவர் வசந்த். அவர் இயக்கிய கேளடி கண்மணி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதுமட்டுமில்லாமல் அந்த படத்துக்காக இளையராஜா இசையமைத்த பாடல்கள் எல்லாம் இன்று வரை சார்ட்பஸ்டராக இருந்து வருகின்றன. ஆனால் அதன் பிறகு வசந்தும் இளையராஜாவும் பல ஆண்டுகளாக இணைந்து பணியாற்றவில்லை.

இந்நிலையில் இப்போது இயக்குனர் வசந்த் இயக்கும் புதிய படத்துக்கு இளையராஜா இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த படத்தின் தலைப்பு மற்றும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்