இளையராஜாவுக்கு ஆதரவாக ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு

வெள்ளி, 1 ஜனவரி 2021 (14:08 IST)
இசைஞானி இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்திற்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீதிமன்றம்வரை வழக்கு சென்ற நிலையில் அவரது பொருட்கள் வெளியே வைக்கப்பட்டது செய்தியாக வெளியானது. இந்நிலையில் இளையராஜாவுக்கு ஆதரவாக அவரது ரசிகள் சென்னையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

இசைஞானி இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவில் ஒருநாள் தியானம் செய்ய அனுமதி கேட்டிருந்த நிலையில் அவருக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது. ஆனால் அவரது அறையிலிருந்த பொருட்கள், விருதுகள், இசைக்கருவிகள் அனைத்தும வெளியேற்றப்பட்டதால் அவர் மிகுந்த வருத்தம் அடைந்து, அங்கு செல்லவில்லை.

இதுகுறித்து, இளையராஜா மன அழுத்ததில் இருப்பதாகவும் அதனால் அவர் பிரசாத் ஸ்டுடியோ செல்லவில்லை எனவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று இளையராஜாவின் பொருட்கள் மொத்தமும் பிரசாத் ஸ்டுடியோவிலிருந்து ஒரு லாரியின் மூலம் அவரது இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

இந்நிலையில் இளையராஜாவின் ரசிகர்கள் ஒரு போஸ்டர் ஒட்டிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அதில், தமிழக அரசே இசைகடவுள் இளையராஜா அவர்களின் இசைச் சொத்துகளை சூறையாடிய பிரசாத் ஸ்டுடியோ கும்பலைக் கைது செய்! 40 ஆண்டுகாலமாக இசைஞானி பயன்படுத்தி வந்த பிரசாத் ஸ்டுடியோவை அரசுடைமையாக்கி இசை மியூசியத்தை உருவாக்கி  என்று கூறிக் கீழே இசைஞானி பக்தர்க்ள் இசைஞானி இசையால் இணைந்தோம் – வாட்ஸ் ஆப் குரூப் சென்னை என்று தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் சமீபத்தில்  தனது டுவிட்ட பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில், #அநாகரிகம்: இசைஞானி அறையின் பூட்டை உடைத்து உடைமைகளை அப்புறப்படுத்தியுள்ளனர். சமூகத்தில் அவருக்குள்ள நன்மதிப்பைக்கூட கணக்கில் கொள்ளாமல் அவரை அவமதித்திருப்பது அநாகரித்தின் உச்சம் . இவரால்தான் அந்த ஸ்டுடியோவுக்குப் பெருமை என்பதை மறந்துசெய்த நன்றி கொன்ற #இழிசெயல் @ilaiyaraajaofflஎனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்