கஷ்டப்படும் விவசாயிகளுக்கு ரூ.1 கோடி கொடுப்பேன். ராகவா லாரன்ஸ்

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2017 (22:10 IST)
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பதில் மட்டுமின்றி சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது தெரிந்ததே. ஏராளமான குழந்தைகளில் கல்விக்கு காரணமாக இருக்கும் ராகவா லாரன்ஸ், பலருடைய உயிரை காக்க சர்ஜரிக்கு லட்சக்கணக்கில் தன்னுடைய சொந்தக்காசை செலவு செய்துள்ளார்




இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இளைஞர்களுக்கு தேவையான பண உதவி, பொருள் உதவியை செய்து வந்த ராகவா, இந்த போராட்டம் வெற்றி பெற ரூ.1 கோடி செலவு செய்யவும் தயார் என்று கூறினார்.

இந்நிலையில் நாளை மறுநாள் அவர் நடித்த 'மொட்ட சிவா கெட்ட சிவா' திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் இன்று அவர் ஒரு அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளார். அதாவது நலிந்த விவசாயிகளுக்காக ரூ.1 கோடி தர முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்

அவர் கூறியது இதுதான்: நாளை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் நினைவிடத்திற்கு சென்று, அவரை வணங்கி வழிப்பட்டவுடன் விவசாயிகளின் துயர் துடைக்கும் பணியை தொடங்க உள்ளேன். ஒருகோடி ரூபாய் ஒதுக்கி நலிந்த விவசாயிகளை கண்டறிந்து அவர்களுடை வங்கிக்கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகை டெபாசிட் செய்யப்படும் என்றும் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

என்னுடைய குடும்பத்தில் ஒருவர் கஷ்டப்பட்டால் எப்படி நான் அவர் வீடுதேடி சென்று உதவுவேனோ அதேபோல் ஒவ்வொரு விவசாயி குடும்பத்திற்கு நானே நேரடியாக சென்று என் கையால் அவர்களுக்கு இந்த உதவியை செய்து அவர்களுடைய கண்களில் ஏற்படும் சந்தோஷத்தை பார்த்து அனுபவிக்க முடிவு செய்துள்ளேன்

மக்களின் பணத்தை எடுத்து மக்களுக்கு கொடுத்தால்தான் அது அரசியல், இது என்னுடைய சொந்தப்பணம், என்னுடைய வியர்வையால் வந்த பணம், எனவே இதை அரசியல் என்று கூற வேண்டாம்

 இவ்வாறு ராகவா லாரன்ஸ் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்
அடுத்த கட்டுரையில்