யோவ் ஸ்பீடு சும்மாவே இருக்க மாட்டியா? ப்ரான் ப்ரேக்கரிடம் வாங்கிய மரண குத்து! - வைரலாகும் வீடியோ!

Prasanth Karthick
திங்கள், 3 பிப்ரவரி 2025 (09:35 IST)

உலக அளவில் பிரபலமாக இருக்கும் யூட்யூபர் I Show Speed ரெஸ்லிங் போட்டியில் சென்று அடிவாங்கி வந்த சம்பவம்தான் தற்போது இளைஞர்களிடையே பேசுபொருளாக உள்ளது.

 

உலக அளவில் திரைப்பட நடிகர்களை விட இன்ஸ்டாகிராம், யூட்யூப் செலிபிரிட்டிகள் புகழடைந்துள்ளனர். அவ்வாறாக உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள இன்ஃப்ளூயன்சராக I Show Speed உள்ளார். இந்தியாவில் நடந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு வந்து இவர் வெளியிட்ட வீடியோக்கள் வைரலாகின.

 

சமீபத்தில் ஸ்பீட் அமெரிக்காவில் நடந்த ராயல் ரம்பிள் ரெஸ்லிங்கை பார்க்க சென்றுள்ளார். அங்கு வளையத்திற்குள் அகிரா டொஸாவா, கார்மெலோ ஹயெஸ் என பல முன்னணி ரெஸ்லர்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ஸ்பீடு விரும்பினால் அதில் கலந்து கொள்ளலாம் என்றதும், ஆர்வக்கோளாறான ஸ்பீடு வேகமாக ஓடிச்சென்று ரிங்கில் ஏறிவிட்டார்.

 

அங்கு போய் கத்திக் கொண்டிருந்த அவரை ப்ரான் ப்ரேக்கர் ஒரு ஸ்மேக்கை போட்டு வெளியே தூக்கி எறிந்தார். இதில் ஸ்பீடுக்கு பலத்த அடிப்பட்டு கட்டுப்போடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதெல்லாம் தேவைதானா என்று அந்த வீடியோவை பார்த்த பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர். இதற்கு முன்னரும் ஸ்பீட் இதுபோல ரெஸில்மேனியாவில் சென்று மரணக்குத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்