நடிகர் விஜய்யை நேரில் பார்த்து என் வருத்தத்தை சொல்ல வேண்டும்- பிரபல இயக்குநர்

Webdunia
புதன், 24 ஜூன் 2020 (23:08 IST)
நடிகர் விஜய் ஒரு தனியார் சேனலுக்குப் பேட்டி கொடுத்ததை ஒருவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில்,இயக்குநர் சேரன் இயக்கி நடித்து பெரும் வெற்றி பெற்ற ஆட்டோகிராப் படத்தைப் பற்றி பாராட்டிப் பேசியிருந்தார்.

இதைப் பார்த்த சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதில் பதிவிட்டிருந்தார். அதில்,இப்படத்தைப் பார்த்து விஜய் என்னை போனில் அழைத்துப் பாராட்டினார். மேலும் அவர் என்னுடன் ஒரு படம் பண்ணவும் ஒத்துக்கொண்டிருந்தார். ஆனால் அந்த நேரத்தில் நான் தவமாய் தவமிருந்து படம் பண்ணிக் கொண்டிருந்ததால் அது சாத்தியமாகவில்லை என கவலை தெரிவித்துள்ளார். அது தவறு என்பது இப்போது தெரிகிறது. விஜய்யை பார்த்து நேரில்  இந்தத் தவறுக்காக அவரிடம் இதற்காக என் வருத்தத்தைத் தெரிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்