மதுரையில் இன்று ஒரேநாளில் 98 பேருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

வெள்ளி, 19 ஜூன் 2020 (18:46 IST)
மதுரையில் இன்று ஒரேநாளில் 98 பேருக்கு கொரோனா:
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த சில வாரங்களாக மிக வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்ததை அடுத்து இந்த நான்கு மாவட்டங்களிலும் இன்று முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லை என்பது தமிழக அரசுக்கு நிம்மதியான ஒரு செய்தியாக இருந்தது. ஆனால் அந்த நிம்மதியைக் குலைக்கும் வகையில் இன்று மதுரையில் ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் 98 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
இதனை அடுத்து மதுரை மாவட்டத்தில் இதுவரை 495 பேர்கள் தோற்றால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் மதுரை மாவட்டத்தில் இதுவரை 350 பேர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் தற்போது 139 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதார மையம் தெரிவித்துள்ளது சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் சொந்த ஊருக்கு பொதுமக்கள் செல்வதால்தான் மதுரை உள்பட மற்ற ஊர்களிலும் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்