மூன்று விஜய்க்கும் நான் ஒருவன் தான் வில்லன்" 'மெர்சலான எஸ்.ஜே.சூர்யா

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2017 (04:03 IST)
சமீபத்தில் வெளியான 'ஸ்பைடர்' படத்தின் மூலம் வில்லனாக மாறியுள்ள எஸ்.ஜே.சூர்யா, விஜய்யின் 'மெர்சல்' படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். 'ஸ்பைடரில்' அவர் காட்டிய வில்லத்தனம் ரசிக்கும்படி இருந்ததால் 'மெர்சல்' படத்தில் அவருடைய நடிப்புக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது



 
 
இந்த நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் 'ஸ்பைடர் மற்றும் 'மெர்சல்' படங்களின் வில்லன் வேடங்களை ஒப்பிட்ட எஸ்.ஜே.சூர்யா, 'ஸ்பைடர் படத்தில் எனக்கு டார்க் வில்லன் ரோல், ஆனால் மெர்சல்' படத்தில் எனக்கு கிளாசிக் வில்லன் ரோல். இந்த படத்தில் விஜய்க்கு மூன்று கேரக்டர்களை கொடுத்த இயக்குனர் அட்லி, மூவருக்கும் சேர்த்து ஒரே வில்லன் கேரக்டராக எனக்கு கொடுத்துள்ளார்' என்று கூறியுள்ளார். எனவே இந்த படத்திலும் வித்தியாசமான 'மெர்சலான' வில்லனை காணலாம் என்பது தெரிகிறது.
 
தமிழ் சினிமாவில் ஒரே மாதிரி வில்லத்தனம் செய்து கொண்டிருப்பவர்கள் மத்தியில் ஒரு புதிய பாக்கேஜ் வில்லன் தோன்றியுள்ளதால் இனி எஸ்.ஜே.சூர்யாவுக்கு அதிக வில்லன் வேடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்