இந்தியாவில் முதல் நபராக டாக்டர் பட்டம் பெற்றுள்ளேன். ஹிப்ஹாப் தமிழா ஆதி..!

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (16:35 IST)
இந்தியாவில் Music Entrepreneurship என்ற பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றுள்ள ஒரே நபர் நான் தான் என நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி தெரிவித்துள்ளார். தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி என்பதும் இவர் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் தற்போது Music Entrepreneurship என்ற பிரிவில் இவர் பிஎச்டி முடித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இது குறித்து அவர் கூறிய போது ’ஒரு சந்தோஷமான விஷயம், பிஹெச்டி முடித்துள்ளேன். இனிமேல் நான் டாக்டர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. ஆனால் படித்து வாங்கிய பட்டம்.
 
Music Entrepreneurship என்ற பிரிவில் நான் பிஹெச்டி முடித்துள்ளேன். எனக்கு தெரிந்து இந்த துறையில் ஆராய்ச்சி செய்து பிஎச்டி பட்டம் பெறுவது இந்தியாவில் இதுவே முதல் முறை என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்