பிரபல இசையமைப்பாளருக்கு திருமணம்: புகைப்படம் உள்ளே...

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2017 (13:15 IST)
கோவையை சேர்ந்த முன்னனி இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதிக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் திருப்பதியில் நடைபெற்றது. 
 
தமிழில் தனி ஒருவன், கவன், அரண்மனை 2 போன்ற படங்ளுக்கு இசையமைத்துள்ளார் ஹிப் ஹாப் ஆதி. அதோடு மீசையை முறுக்கு என்ற படத்தில் நாயகனாகவும் அறிமுகமானார். 
 
ஜல்லிகட்டு போராட்டத்தின் போதும், தனது டக்கரு டக்கரு பாடலினால் இளைஞர்களுக்கு உத்வேகத்தை அளித்தார். சமீபத்தில் கோவை கெத்து என்ற பாடலையும் வெளியிட்டார். 
 
இந்நிலையில், எந்த ஒரு ஆர்பாட்டமும் இன்றி அமைதியாக தனது திருமண நிச்சயதார்த்தை முடித்துள்ளார். இவரது நிச்சய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. 
 
ஹிப்ஹாப் ஆதியும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இனி நான் சிங்கிள் கிடையாது என பதிவு செய்துள்ளார். விரைவில் இவரது திருமண தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்