இமயமலை பயணம்: பத்ரிநாத் கோவில்,வியாசர் குகைக்கு சென்ற ரஜினிகாந்த்

Webdunia
செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (14:45 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினி காந்த். இவர் நடிப்பில்,  நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். இப்படம்  ஆகஸ்ட் 10 ஆம்  தேதி  உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸானது.

ரஜினியுடன் இணைந்து  மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராப், தமன்னா, ரம்யாகிருஷ்ணன்  உள்ளிட்ட பல நட்சத்திரங்கள்  நடிப்பில், அனிருத் இசையில்,  சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம்  முதல் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று  ரூ.350  கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில், பட ரிலீஸுக்கு முன்பே ரஜினிகாந்த் இமயமலைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

சுதந்திர தினக் கொண்டாட்டத்தை ஒட்டி , துவாரஹாரத்தில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமத்தில் நேற்று  நடிகர் ரஜினிகாந்த்,  ஆசிரம சுவாமிஜியுடன் இணைந்து தேசிய கொடி ஏந்தினார்.

அங்குள்ள ஆதி பத்ரி நாத் கோயிலில் 3000 ஆண்டு கால பழமையான சுயம்பு மகாவிசஷ்ணுவையும் அவர் வழிபட்டார்.

இந்த ஆன்மீகப் பயணத்தில், ரஜினிகாந்த் ஆன்மிக துறவிகளை சந்தித்து ஆசி பெறுகிறார். சாலையோரம் உள்ள ஓட்டல்களில் பொங்கல் வாங்கி சாப்பிட்டு, டீ குடிக்கிறார். இரவில் ஆசிரமங்களில் தங்குகிறார்.

இந்த நிலையில், பக்ரிநாத் கோயிலுக்குச் சென்று  ரஜினி வழிபட்டார். அவரை கண்ட பக்தர்கள் அவரை ஜெயிலர் என்று குரல் எழுப்பி அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அதன்பின்னர், அவரைப் பாதுகாப்பாக கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். அங்குள்ள வியாசர் குகைக்குச் சென்று அவர் தியானம் மேற்கொண்டார்.

இதையடுத்து, பாபாஜி குகைக்கு ரஜினி செல்லவுள்ளார்.  வரும் 17 ஆம் தேதி இமயமலை பயணத்தை முடித்துவிட்டு அவர்  சென்னை திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்