தெலுங்கு சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் சுனில். இவர் அங்குள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வரும் நிலையில்,கடந்த ஆண்டு வெளியான புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூனுக்கு வில்லனாக நடித்திருந்தார்.
இது ரசிகர்களைக் கவர்ந்தார்.
இந்த நிலையில், ராகவா லாரன்ஸ்-ன் சகோதரர் எல்வின் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். புல்லட் என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் சுனில் இணைந்துள்ளார்.இதைப் படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை இன்னாசி பாண்டியன் இயக்குகிறார்.