எப்படி இருக்கிறது ஹே சினாமிகா? ரசிகர்களைத் திருப்திப் படுத்தியதா?

Webdunia
சனி, 5 மார்ச் 2022 (10:56 IST)
துல்கர் சல்மான் காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஹயாத்ரி ஆகியோர் நடிப்பில் நடன இயக்குனர் பிருந்தா இயக்கியுள்ள ஹே சினாமிகா நேற்று வெளியானது.

துல்கர் சல்மான், அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால் நடித்த ’ஹேய் சினாமிகா’ படத்தினை நடன இயக்குனர் பிருந்தா இயக்கியுள்ளார். முக்கோணக் காதல் கதையாக உருவாகி வந்த இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தன.இந்நிலையில் நேற்று வெளியானது இந்த திரைப்படம்.

இந்நிலையில் டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் படத்துக்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வரவில்லை. தேய்வழக்கான கதையாகவும், காட்சிகளில் சுவாரஸ்யமே இல்லாமலும் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்