’தல’ பிரதமர்,,தளபதி முதல்வர்...போஸ்டரால் பரபரப்பு

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (23:39 IST)
தல தோனி திடீரென பீஸ்ட் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்றார். அங்கு அவர் விஜய்யுடன் தனிமையில் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். இதுகுறித்த போஸ்டர் இன்று மதுரையில் வெளியாகியுள்ளாது.

இருவரும் என்ன பேசியிருப்பார்கள் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளம்பர படம் ஒன்றை எடுக்க இருப்பதாகவும் அதில் விஜய் நடிப்பாரா என்று கேட்பதற்காக தோனி வந்ததாகவும் கூறப்படுகிறது

தோனியின் வேண்டுகோளை ஏற்று விஜய் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பர படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இன்னும் ஓரிரு நாட்களில் இதன் படப்பிடிப்பு நடக்கும் என்றும் தோனி மற்றும் விஜய் இணைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் விளம்பரப்படத்தில் காட்சிகள் இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தோனி – விஜய் இருவரும் சந்திதத்தது குறித்து மதுரையில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.  அதில், தல தோனியை வருங்காலப் பிரதமர் போலவும், , நடிகர் விஜய்யை வருங்காலப் பிரதமர் போலவும் கற்பிதம் செய்து ரசிகர்காள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்