அஜித் பட இயக்குநரின் அடுத்த படம் நாளை ரிலீஸ்!

புதன், 11 ஆகஸ்ட் 2021 (22:13 IST)
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ஷெர்ஷா என்ற படம் நாளை ஒடிடியில்  ரிலீஸாகவுள்ளது.

இப்படத்தில், சித்தார்த் மல்ஹோத்ரா, கியரா அத்வானி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  மேலும், இப்படம் நாளை காலை அமேசான் ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளது.

பாகிஸ்தானுக்கு எந்திரான கார்கில் போரில் இந்திய கேப்டன் விக்ரம் பாத்ரா தனது 24 வயதிலேயே வீரமரணம் அடைந்தார். அவரது வாழ்க்கை வரலாற்றுப் படம் ஷெர்ஷ என்ற பெயரில் உருவாகியுள்ளது.

விக்ரம் பாத்ரா கதாப்பாத்திரத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ளார், இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடைசியாக ரிலீஸான படம் யட்சன் ஆகும். இப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு ரிலீஸானது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்