பட்டியலின திரைக்கலைஞர்களை அவதூறு செய்த மீரா மிதுன்!

சனி, 7 ஆகஸ்ட் 2021 (15:55 IST)
நடிகை மீரா மிதுன் எப்போதும் தன்னை சுற்றி சர்ச்சைகள் இருக்கும் விதமாக பேசிவருகிறார்.

நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவை மிகவும் தரக்குறைவாக பேசி விமர்சனம் செய்து வந்தார் நடிகையும் மாடலுமான மீரா மிதுன். இதற்கு எதிர்வினை ஆற்றும் சம்மந்தப்படட் நடிகர்களின் ரசிகர்களும் ஆபாசத்தை வாரி உமிழ்ந்தனர். இதனால் சில நாட்கள் அவர் சமூகவலைதளங்களில் இவர் பேசுபொருளாக இருந்தார்.

இந்நிலையில் சில மாதங்கள் அமைதியாக இருந்த அவர் இப்போது தமிழ் சினிமாவில் இருக்கும் பட்டியலினக் கலைஞர்களை தவறாக பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இதற்கு பலரும் இணையத்தில் கண்டனங்களை தெரிவித்து மீரா மிதுனைக் கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்