மீண்டும் சூர்யாவை இயக்குகிறார் ஹரி

Webdunia
வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (11:09 IST)
‘சாமி 2’ படத்துக்குப் பிறகு மீண்டும் சூர்யாவை இயக்க இருக்கிறார் ஹரி. 
சூர்யா நடிப்பில் ‘ஆறு’, ‘வேல்’, ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’, ‘சிங்கம் 3’ ஆகிய படங்களை இயக்கியவர் ஹரி. ‘சிங்கம்’ படத்தின் அனைத்துப்  பாகங்களுமே சூப்பர் ஹிட்டாகின.
 
தற்போது விக்ரம் நடிப்பில் ‘சாமி 2’ படத்தை இயக்கி வருகிறார் ஹரி. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், பாபி சிம்ஹா வில்லனாக  நடிக்கிறார்.
 
இந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார் ஹரி. ‘சிங்கம்’ படத்தின் நான்காம் பாகமாக அது இருக்குமா அல்லது வேறொரு கதைக்களத்துடன் இறங்குகிறாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்