பிறந்த நாள் வாழ்த்துக்கள் நடிகை சங்கீதா!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (07:04 IST)
நடிகை சங்கீதா கிரிஷ் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
நடிகை சங்கீதா பூஞ்சோலை என்ற திரைப்படத்தில் அறிமுகமானார், அதன்பின்னர் காதலே நிம்மதிம் கபடி கபடிம் உத்தமன் உள்பட ஒரு சில படங்களில் நடித்தார். பாலா இயக்கிய பிதாமகன் திரைப்படம் தான் அவருக்கு திருப்புமுனையை கொடுத்தது என்பதும் அதன் பின்னர் உயிர் உள்பட ஒரு சில படங்களில் நல்ல கேரக்டரில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளர் கிரிஷ் அவர்களை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சங்கீதாவுக்கு ஒரு மகள் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இன்று பிறந்தநாளை கொண்டாடி வரும் சங்கீதாவுக்கு வெப்துனியா சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்