இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் புதிய படம்… பூஜையோடு தொடக்கம்!

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2022 (15:13 IST)
ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் இன்று சென்னையில் பூஜையோடு தொடங்கியுள்ளது.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி.  குஷ்பு போல பூசினார் போல இருந்த அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமான மஹாவில் நடிக்க அவர் ஒப்பந்தமானார்.  இந்த படத்தில் அவரது முன்னாள் காதலரான சிம்பு சிறப்புத்தோற்றத்தில் நடித்து வந்தார். அந்த படம் முடிந்த நிலையில் அவர் கைவசம் வேறுபடங்கள் இல்லை என்றானது.

இந்நிலையில் இப்போது இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு திரை எழுத்தாளர் மா தொல்காப்பியன் கதை எழுத, தயாரிப்பாளர் கோ தனஞ்செயன் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாகி வரும் இந்த படம் இன்று பூஜையோடு தொடங்கியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்