இயக்குனர் எம் ராஜேஷ் ஸ்க்ரீன் சீன் நிறுவனத்துக்காக ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு முன்னணி இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் பூஜை ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடந்து உடனடியாக படப்பிடிப்பு ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் தொடங்கி ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது.
இந்நிலையில் இப்போது முதல் கட்ட படப்பிடிப்பை இயக்குனர் ராஜேஷ் நிறைவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஜெயம் ரவி ஆண்டனி இயக்கத்தில் கீர்த்தி சுரேஷோடு இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பூஜைக்காக இப்போது சென்னை திரும்பியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது தவிர ஜெயம் ரவி இயக்குனர் அகமது இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.