வலிமையை கிடப்பில் போட்டு அடுத்த படத்துக்கு செல்லும் ஹெச் வினோத்!

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (18:40 IST)
அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி வரும் ஹெச் வினோத் அஜித்தின் அடுத்த படத்தையும் அவரே இயக்க உள்ளாராம்.

நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டு மீண்டும் தொடங்கி 90 சதவீதம் வரை முடிந்துள்ளது.

இன்னும் சில நாட்கள் மட்டுமே வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டியுள்ளதாம். இந்நிலையில் அஜித் தனது அடுத்த படத்தையும் ஹெச் வினோத்தையே இயக்க சொல்லியுள்ளார். இந்நிலையில் இப்போது வலிமை படத்தின் வெளிநாட்டுக் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டிய நிலையில் அடுத்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகளை ஹெச் வினோத் ஜூன் மாதத்தில் இருந்து தொடங்க உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்