கமல்& ஹெச் வினோத் படத்தில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (08:47 IST)
சதுரங்க வேட்டை மற்றும் தீரன் ஆகிய படங்களை இயக்கிய ஹெச் வினோத் அடுத்து அஜித்தின் ஆஸ்தான இயக்குனராக மாறினார். அவரை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு என மூன்று படங்களை இயக்கினார்.

இதையடுத்து இப்போது வினோத் கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் புதிய படத்துக்கான திரைக்கதை வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் குறைந்த நாட்களில் முடிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்துக்காக கமல்ஹாசன் 45 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில்  விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமலை விட அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்