லியோ படத்தில் அர்ஜுனின் இளமையான தோற்றம் இதுதானா? வெளியான புகைப்படங்கள்!

சனி, 24 ஜூன் 2023 (13:02 IST)
விஜய் நடிக்கும் லியோ படத்தில் அர்ஜுன் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். அவருக்கு படத்தில் விஜய்யின் நண்பர் வேடம் என்றும் வில்லன் சஞ்சய் தத்துக்கு தம்பியாக நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு ஸ்டியோவில் விஜய்யும் அர்ஜுனும் இளமையான தோற்றத்தில் மோதிக் கொள்ளும் ஆக்‌ஷன் காட்சிகளை லோகேஷ் படமாக்கின்பார்.

இந்நிலையில் இப்போது லியோ படத்தில் அர்ஜுனின் கெட்டப் பற்றிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. நீளமான தலைமுடி மற்றும் தாடியோடு இருக்கும் அர்ஜுனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாக, இதுதான் லியோ படத்தில் அவரின் கெட்டப் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்