ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் ஹீரோவாகும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா!

புதன், 21 ஜூன் 2023 (08:04 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மிக குறுகிய காலத்துக்குள் வளர்ந்து இருக்கிறார் விஜய் சேதுபதி. தமிழ் தாண்டியும், தெலுங்கு இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் அவர் படங்கள் நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் இப்போது விஜய் சேதுபதியின் மகன் சூர்யா திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் விரைவில் உருவாக உள்ள படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க உள்ளாராம்.

சூர்யா ஏற்கனவே விஜய் சேதுபதியோடு சிந்துபாத் படத்தில் நடித்திருந்தார். இப்போது வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்திலும் நடித்து வருவதாக சொல்லப்படும் நிலையில், அனல் அரசு இயக்கும் படத்தில் தனி ஹீரோவாக நடிக்க உள்ளதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்