மீனவர்கள் போராட்டத்தில் ஜி.வி.பிரகாஷ்

Webdunia
ஞாயிறு, 10 டிசம்பர் 2017 (21:11 IST)
புயலில் சிக்கி கரை திரும்பாத மீனவர்களை மீட்கக்கோரி குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஜி.வி.பிரகாஷ் கலந்துக்கொண்டார்.

 
கடலுக்குச் சென்ற மீனவர்கள் ஒக்கி புயலால் கடலில் சிக்கி தவித்தனர். மத்திய மற்றும் மாநில அரசு கடலில் சிக்கிய மீனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. கடலோர காவல் படையினரும், கடற்படை வீரர்களும் மீனவர்களை மீட்டு வருகின்றனர். 
 
இன்னும் அதிகளவில் மீனவர்கள் வீடு திரும்பாததால் அவர்களது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இன்னும் 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தில் இருந்து மீன்பிடிக்க 38 படகுகளில் சென்ற மீனவர்கள் நிலைமை இதுவரை என்னவென்று தெரியவில்லை. இந்த மீனவர்களை மீட்கக் கோரி சின்னதுறையில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
 
இந்த போராட்டத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் கலந்துக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்