எது ஆண்மைத்தனம்? இளையராஜாவிற்கு கோவிந்த் வசந்தா பதிலடி!

Webdunia
வியாழன், 30 மே 2019 (19:58 IST)
இளையராஜாவின் விமர்சனத்திற்கு கோவிந்த் வசந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
தற்போது தமிழில் வெளியாகும் பல படங்களில் இளையராஜாவின் பழைய பாடல்கள் ரெஃபரன்ஸாகவோ அல்லது பின்னணியிலோ வைக்கப்படுகின்றன. சமீபத்தில் வெளியான 96 படத்தில் அதிகமாக இளையராஜா பாடல்கள் பயன்படுத்தப்பட்டது.
 
இது குறித்து இளையராஜாவிடம் கேள்வி எழுப்பியபோது ’இது மிகவும்  தவறான விஷயம். 80களில், 90களில் இடம்பெறும் பாடல் என்றால் ஏன் நான் இசையமைத்த பாடல்களை வைக்கவேண்டும்?. அந்தப்படத்தின் இசையமைப்பாளரே அந்த காலத்திற்கு ஏற்றார் போல ஒரு பாடலை இசையமைக்க முடியாதா? இது அவர்களின் திறமையின்மை மற்றும் ஆண்மை இல்லாத தனத்தைதான் காட்டுகிறது எனக் கடுமையாக சாடினார்.
 
இதற்கு கோவிந்த் வசந்தா பதில் அளிக்கும் விதமாக தனது டிவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கோவிந்த் வசந்தா தளபதி படத்தில் வரும் கண்மணி கண்ணால் ஒரு சேதி பாடலின் இசையை வாசிக்கிறார். 
 
மேலும், அந்த வீடியோவோடு நான் என்றுமே இசைஞானி இளையராஜாவின் ரசிகன் என்றும் தெரிவித்துள்ளார். இதை கண்ட ரசிகர்கள் பலர் கோவிந்தை பாராட்டி வருகின்றனர். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்