நடிகர் விஜய் ’அதை எல்லாம் பார்க்க மாட்டார் ’ - பிரபல நடிகர் சுவாரஸ்ய தகவல்

செவ்வாய், 28 மே 2019 (17:34 IST)
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். தற்போது அவர் தளபதி 63 என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்துவருகிறார். பிரபல இயக்குநர அட்லி இப்படத்தை இட்யக்குகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் திரையுலக பிரபலங்கள் இப்படத்தில் நடித்துவருகிறார்கள். இதில்  நடிகர் சவுந்தரராஜா என்பவரும்  இதில் இணைந்து நடித்துவரும் நிலையில் தற்போது விஜய்யை பற்றி ஒரு தகவல் தெரிவித்துள்ளார்.
நடிகர் சவுந்தரராஜா ஏற்கனவே சுந்தரபாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது அவர் அட்லி இயக்கும் தளபதி 63 என்ற படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துவருகிறார்.
 
ஒரு பேட்டியில் சவுந்தரராஜா கூறியுள்ளதாவது :
 
தெறி படத்தில் விஜய் சாருடன் நடித்துள்ளேன். அதன் மூலமாக நான் கற்றுக்கொண்டேன். தற்போது விஜய் 63 படத்தில் நடித்து வருகிறேன். இப்படத்தில் எனக்கு 6 காட்சிகள் உள்ளது. விஜய் சாருடன் நடிக்கும் போது நிறைய கற்றுக்கொள்கிறேன்.
தினமும் ஷுட்டிங்கின் போது அன்றைய காட்சிகள் குறித்து அட்லி துணை நடிகர்களிடம் விளக்குவார். அதேபோல் விஜய் வந்ததும் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை விளக்குவார். அப்போது விஜய் ’ஒத்திகை எல்லாம் பார்க்காமல் ஒரே டேக்கில் நடிக்கவேண்டிய காட்சிகளை நடித்துவிடுவார்.’ என்று தெரிவித்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்