குட்னைட் படத்தின் இயக்குனரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்?

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2023 (13:19 IST)
இந்த ஆண்டு மே மாதம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும்  குவித்தது. இந்த படத்தில் ஜெய்பீம் புகழ் மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கி இருந்தார்.

நகர்ப்புற திரையரங்குகளில் நல்ல வசூலைக் குவித்த ஓடிடியிலும் வெளியாகி  நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தை இயக்கிய விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படம் சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்குப் பிறகு விநாயக் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்