நீங்க சப்போர்ட் பண்ணிட்டா ஜோதிகா பேசுனது சரியா? – வம்படியாய் ஆஜரான காயத்ரி ரகுராம்!

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (12:12 IST)
திரைப்பட விழா ஒன்றில் நடிகை ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் குறித்து பேசியது சர்ச்சையான நிலையில் இதுகுறித்து விமர்சித்து நடிகை காயத்ரி ரகுராமும் பதிவிட்டுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் பேசிய நடிகை ஜோதிகா தஞ்சாவூரில் அரசு மருத்துவமனையில் படப்பிடிப்பிற்கு சென்றபோது அது சுகாதாரமற்று இருந்ததாகவும், அதேசமயம் தஞ்சை பெரியகோவில் பெரும் பொருட் செலவில் பராமரிக்கப்படுவதாகவும் கூறி, கோவில்களுக்கு செய்யும் அளவுக்கான செலவை பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் செலவளிக்க வேண்டும் என பேசியுள்ளார். தஞ்சை பெரிய கோவில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகை ஜோதிகா மீது இந்து மத ஆர்வலர்கள் பலர் விமர்சனங்களை முன் வைத்தனர்.

அதேசமயம் நடிகை ஜோதிகாவின் கருத்து சரியானதுதான் என அவருக்கு ஆதரவாகவும் சிலர் பேசி வருகின்றனர். இந்நிலையில் ஜோதிகாவின் கருத்து குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகை காயத்ரி ரகுராம் ” திக, திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி, விசிக மற்றும் ஒருசில அரைவேக்காடு இந்துக்கள் ஜோதிகாவின் கருத்தை ஆதரிப்பதால் அது சரியென்று ஆகி விடாது” என கூறியுள்ளார்.

இந்த பிரச்சினை சற்று ஓய்ந்திருந்த நிலையில் காயத்ரி ரகுராமின் கட்சிகளை இழுத்து பேசும் பதிவால் மேலும் இந்த பிர்ச்சினை வளரலாம் என கூறப்படுகிறது. இதனால் ஜோதிகாவின் கருத்து மேலும் பல சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்