தளபதி இமேஜை கெடுத்துடாதீங்க - மாளவிகாவிற்கு மாஸ்டர் தான் லாஸ்ட் ஆஹ்?

திங்கள், 27 ஏப்ரல் 2020 (09:42 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.     ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஹீரோயினாக தான் நடிக்கும் முதல் படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடிப்பதால் நிச்சயம் இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உண்டு என கோலிவுட் வட்டாரங்கள் முத்திரை குத்திய நிலையில் அதை மாளவிகாவே கெடுத்துக்கொள்வார் போல...


ஆம், மாளவிகா தனது இன்ஸ்டாகிராமில் படுகவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இது விஜய் ரசிகர்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. விஜய் படத்திற்கு பேமிலி ஆடியன்ஸ் வருவார்கள். நீங்கள் இப்படியே போஸ் கொடுத்து போட்டோ போட்டால் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாது. இப்படியே போனால் மாஸ்டர் தான் உங்களுக்கு முதலும் கடைசியுமாக அமைந்துவிடும். எனவே ஒழுங்கா கிடைத்த மார்க்கெட்டை தக்கவைத்துக்கொள்ள எங்கள் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் என அட்வைஸ் கொடுத்துள்ளனர் நெட்டிசன்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்