கஜா புயல் நிவாரணம்: விஜயகாந்த் கொடுத்த தொகை இவ்வளவா ? இவர் தான் ரியல் சூப்பர் ஸ்டார்

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (13:13 IST)
கஜா புயலால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையாக கேப்டன் விஜயகாந்த் ரூ.1 கோடி கொடுத்துள்ளார்.
 
விஜயகாந்த் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்தவர். பிறகு அரசியலில் கால் பதித்து எதிர்க்கட்சி தலைவராக களத்தில் குதித்து ஆளும் கட்சியினர் கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர். 
 
சமீப காலமாக கேப்டன் விஜயகாந்த் உடல்நலம் முடியாமல் இருந்து வருகின்றார், இருந்தாலும் மக்களுக்காக அவ்வபோது குரல் கொடுத்து வருகிறார்.
 
அதை நிரூபிக்கும் வகையில் தற்போது கஜா புயலுக்காக ரூ 1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்களை விஜயகாந்த் அனுப்பி வைக்கவுள்ளாராம். 
 
இதுவரை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்கிய நடிகர்களிலேயே அதிக தொகை கொடுத்தது  விஜயகாந்த் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனால் அவரின் ரசிகர்களும் , கட்சி தொண்டர்களும் கேப்டன் ரியல் சூப்பர் ஸ்டார் என பாராட்டுக்களை தெரிவித்து வருகிறன்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்