கௌதம் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் துருவநட்சத்திரம் படத்தில் பார்த்திபன் வில்லனாக நடிக்கக்கூடும் என்று செய்தி வெளியிட்டிருந்தோம். பார்த்திபனும் அதனை உறதி செய்துள்ளார்.
தனது படத்தில் நடிக்க வேண்டும் என்று கௌதம் பார்த்திபனிடம் கேட்டுக்கொண்டுள்ளார். படத்தின் கதை, கதாபாத்திரம் குறித்து சரியாக தெரியாது, ஆனால் கௌதம் படத்தில் நடிக்கிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார்.
துருவநட்சத்திரத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தபோதும் பார்த்திபனைதான் கௌதம் அணுகியிருந்தார் என்பது முக்கியமானது.