‘வேட்டை நாய்’க்கு ஜோடியான ஹீரோயின்

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (10:53 IST)
ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் ‘வேட்டை நாய்’ படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் ‘கடுகு’ புகழ் சுபிக்‌ஷா. 

 
தயாரிப்பாளராக இருந்து, பாலாவின் ‘தாரை தப்பட்டை’ மூலம் நடிகரானவர் ஆர்.கே.சுரேஷ். அவருடைய வில்லத்தன நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. எனவே, ‘மருது’ படத்திலும் வில்லனாக நடித்தார். தற்போது ‘இப்படை வெல்லும்’, ‘ஸ்கெட்ச்’  உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். 
 
இன்னொரு பக்கம், ஹீரோவாகவும் நடிக்கிறார் ஆர்.கே.சுரேஷ். இந்தப் படத்துக்கு, ‘வேட்டை நாய்’ என்று தலைப்பு  வைக்கப்பட்டுள்ளது. ஜெயசங்கர் என்பவர் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘கடுகு’ படத்தில் நடித்த சுபிக்‌ஷா, ஆர்.கே.சுரேஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
அடுத்த கட்டுரையில்