இரண்டு ஹீரோயின்களுடன் வெளிநாடு போகும் விஜய்

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (09:56 IST)
படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக, இரண்டு ஹீரோயின்களுடன் ஐரோப்பாவிற்கு செல்ல இருக்கிறார் விஜய்.

 
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘விஜய் 61’ படத்தின் படப்பிடிப்பு, தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.  சென்னை மற்றும் ராஜஸ்தான் ஆகிய இடங்களில் நடைபெற்ற படப்பிடிப்பில், விஜய் – நித்யா மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துவிட்டனர். 
 
அதன்பிறகு முறுக்கு மீசையை மழித்துவிட்டு ஸ்டைலிஷ்ஷாக மாறிய விஜய் நடிக்கும் ஆக்‌ஷன் காட்சிகளை தற்போது எடுத்து வருகின்றனர். இந்நிலையில், இன்றோடு அந்த ஷெட்யூல் முடிகிறதாம். எனவே, அடுத்த ஷெட்யூலுக்காக ஐரோப்பா  செல்கின்றனர். 
 
ஓய்வே இல்லாமல், நாளையே ஐரோப்பா புறப்படுகிறது படக்குழு. விஜய்யுடன் காஜல் அகர்வால், சமந்தா ஆகியோரும் செல்கின்றனர். அவர்கள் சம்பந்தப்பட்டக் காட்சிகளை அங்கு படம்பிடிக்கின்றனர். கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை அங்கு  படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.
அடுத்த கட்டுரையில்