மனைவியுடன் இணைந்து படம் தயாரிப்பு.. ’’லவ் யூ நா தேங்க்ஸ்…’’ .பிரபல பாடலாசிரியக்கு அட்லீ ரீடுவீட்

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (15:38 IST)
அட்லி தனது மனைவியுடன் இணைந்து தயாரித்துள்ள அந்தகாரம் படத்துக்கு  பாடலாசிரியர் விவேக் அட்லியையும் அவரது மனைவியையும் பாராட்டியுள்ளார்.

ஆர்யா நடிப்பில்  ராஜா ராணி, நடிகர் விஜய்யை வைத்து,தெறி, பிகில், மெர்சல் ஆகிய படங்களை இயக்கியவர் அட்லீ.

இவரது படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து சங்கி என்ற படத்தை அவர் இயக்கவுள்ளார்.

இந்நிலையில், அவர் பிரபல ஓடிடி வலைதளமான நெட்பிளிக்ஸில் அந்தகாரம் என்ற படத்தை தயாரித்துள்ளார். அவருடன் அவரத் மனைவி பிரியா அட்லியும் தயாரித்துள்ளார். இப்படத்தை விக்னராஜன் என்பவர் எழுதி இயக்கியுள்ளார்.

இந்நிலையில், பாடலாசிரியர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில்,  அன்புள்ள தோழி பிரியா அட்லி, உங்களுடைய உழைப்பு எனக்குத் தெரியும்….நீங்கள் அட்லியுடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளதற்காகவும் உழைப்பிற்காகவும் உங்களுக்கு  வெற்றி கிடைத்தே தீரும் எனப் பதிவிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்த அட்லீ, லவ் யூனா தேங்க்ஸ் என்று தெரிவித்துள்ளார். இப்படம் வரும்  நவம்பர் 24 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்