உடல் உடல் நிலை காரணமாக ரஜினி அரசியலுக்கு வருவது சந்தேகம்தான் என்ற தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் அதே நேரத்தில் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள உடல்நிலை குறித்த தகவல்கள் உண்மை என்று மட்டும்தான் அவர் கூறினாரே தவிர அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறவில்லை என்றும், கண்டிப்பாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்
இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னையில் ரஜினிக்கு ஆதரவாக போஸ்டர்கள் பல இடங்களில் ஒட்டப்பட்டிருக்கிறது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, நீங்க வாங்க ரஜினி, எங்கள் ஆதரவு உங்களுக்கு தான். ஓட்டு போட்டா ரஜினிக்குதான் என்ற வாசகங்கள் அந்த போஸ்டரில் உள்ளது. இந்த போஸ்டரால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.