பிரபல நடிகை வீட்டில் தீ விபத்து!

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (18:46 IST)
பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளும்,  நடிகையுமான கனகாவின் வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் 80,90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தனவர் கனகா.

இவர், தமிழ் மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் முன்னணி நடிகர்கள், சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

குறிப்பாக  சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அதிசய பிறவி, ராமராஜனுடன் கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களில்  நடித்திருந்தார். அவை பெரும்பாலும் சூப்பர் ஹிட் படங்கள் ஆகும்.

இவர், சென்னை ஆர். ஏ.புரத்தில் தன் வீட்டில் வசித்து வந்த நிலையில், இன்று அவரது வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்தும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புதுறையினர் தீயை அணைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்