பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி...ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (17:19 IST)
பிரபல சின்னத்திரை நடிகை உர்ஃபித் ஜாவத் குரல் வளை அலர்ஜியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல  இந்தி சினிமா நடிகையும், மாடல் அழகியுமான உர்ஃபித் ஜாவத்.

25 வயதான இவர் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட அனைத்து சமூகவலைதளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில்,  உடல் நலக்குறைவு காரணமாக துபாயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு குரல் அலர்ஜி காரணமாக பேசுவதில் பிரச்சனை ஏற்பட்டு, அதற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இவர் விரைவில் குணமடைய வேண்டுமென ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் பதிவிட்டு வருகின்றனர்.

 

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்