பயணிகளிடம் திருட்டு....ஓடும் ரயிலில் கீழே தள்ளிவிட்டு திருடன் கொலை!

திங்கள், 19 டிசம்பர் 2022 (19:08 IST)
அயோத்தியா சென்று கொண்டிருந்த ரயிலில் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்ட திருடன் ஒருவர் ரயிகில் இருந்து கீழே தள்ளி கொலை செய்யப்பட்டுள்ளார்.

அயோத்தியில் இருந்து டெல்லி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் பெண் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட முயன்ற ஒரு திருடன் மீது பயணிகள் ஆத்திரம் அடைந்தனர்.

அப்போது, திருடனைக் கையும் களவுமாகப்பிடித்த மக்கள், அவரை கீழே அமரவைத்து தாக்கினார்.

அவர் எவ்வளவு மன்னிப்பு கேட்ட போதிலும், ஆண்களில் ஒருவர் அவரைப் பிடித்து, இழுத்து, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளினார்.

இதில், ஷாஜஹானூர் தில்ஹர் என்ற ரயில்  நிலையம் அருகேயுள்ள மின் கம்பத்தில் இளைஞரின் தலை மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுதொடர்பாக நரேந்திரகுமார் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Edited By Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்