பிரபல நடிகர் கொரொனா தொற்றால் உயிரிழப்பு

Webdunia
சனி, 30 அக்டோபர் 2021 (18:40 IST)
பாலிவுட் சினிமாவின் மூத்த நடிகர் யூசுப் உசைன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தி சினிமாவில் தூம் -2, ஓ மை காட், ஐ எம் சிங் , ரோட் டூ சங்கம் உள்ளிட்ட ஏராளமான படங்களில்  நடித்துப் புகழ்பெற்றவர் நடிகர் யூசுப் உசைன்.

இவருக்குக் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து,  மும்பைலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தத் தகவலை நடிகர் யூசுப் கானின் மருமகனும், பிரபல சினிமா இயக்குநருமான் ஹன்சல் மேதா தனது டுவிட்டர்  பக்கத்தில், நான் படம் வெளியிடுவதில் சிரமப்பட்ட போது, அவரது பேங்க் டெப்பாசிட்டில் இருந்து பணம் கொடுத்து என் படத்தை வெளியிட உதவி செய்தார். அவர் எனக்குத் தந்தை போன்றவர். இன்று அவர் மறைந்துவிட்டார்.அவரை மிஸ் செய்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்