வெற்றிமாறன் இயக்கத்தில் அஜித் படம்.. அடிச்சுவிடும் நெட்டிசன்கள்..!

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2023 (18:31 IST)
வெற்றிமாறன் இயக்கத்தில் அஜித் ஒரு திரைப்படத்தில் நடிக்க போவதாக தங்களை தாங்களே பத்திரிகையாளர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் சிலர் தங்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் அஜித் நடிக்க உள்ளார். அதன் பிறகு தான் அவருடைய 64வது படம் என்ன என்பது உறுதி செய்ய முடியும்.

இந்த நிலையில் விடுதலை படத்தையே இரண்டு வருடங்களாக எடுத்துக் கொண்டிருக்கும் வெற்றிமாறன் அடுத்ததாக இயக்க உள்ள வாடிவாசல் திரைப்படத்திற்கும் இரண்டு வருடங்கள் எடுத்துக் கொள்வார்.  

இந்த நிலையில் அஜித்தின் 64வது திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாக ஒரு வதந்தியை சிலர் பரப்பி உள்ளனர். இந்த வதந்தியால் சமூக வலைதளத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஆனால் விவரம் தெரிந்த கோலிவுட் திரை உலகினர் அஜித் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் உருவாக வாய்ப்பே இல்லை என்று கூறி வருகின்றனர்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்