ரஜினியின் கூலி படத்தில் இருந்து வெளியேறினாரா பஹத் பாசில்?

vinoth
திங்கள், 8 ஜூலை 2024 (14:50 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், பஹத் பாசில், ஸ்ருதிஹாசன் ஆகியோர் இதுவரை ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படும் நிலையில் பாலிவுட் மற்றும் டோலிவுட் நடிகர்கள் சிலரும் படத்தில் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் பஹத் பாசிலும் ஒருவராக இருப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் பஹத் பாசில் கூலி படத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் இப்போது அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என சொல்லப்படுகிறது. அவர் ஏற்கனவே பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதால், இந்த படத்தில் தன்னால் நடிக்க முடியவில்லை என ஒதுங்கிக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே பஹத், லோகேஷுடன் விக்ரம் படத்திலும், ரஜினியோடு வேட்டையன் படத்திலும் இணைந்து பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்