புனீத் மறைவுக்குப் பின் கர்நாடகாவில் அதிகரிக்கும் கண்தானம்… ரசிகர்கள் ஆர்வம்!

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (15:27 IST)
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கண்தானம் செய்திருந்தார். அதன் மூலம் நான்கு பேருக்கு பார்வைக் கிடைத்தது.

கன்னடத்தில் புகழ்பெற்ற நடிகரும், பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனுமான புனித் ராஜ்குமார் சில தினங்கள் முன்பாக மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் இந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் அவர் உடல் பயிற்சி மற்றும் உணவு ஆரோக்ய விஷயத்தில் மிகவும் அக்கறைக் கொண்டவர்.

இந்நிலையில் அவரின் மரணம் பல இளைஞர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்றால் அவரது மறைவுக்குப் பின் பெங்களூருவில் இளைஞர்கள் அதிகளவில் இதய பரிசோதனை செய்துகொள்ள ஆரம்பித்துள்ளார்களாம். கர்நாடக மாநில அரசால் நடத்தப்படும் ஸ்ரீ ஜெயதேவா இருதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில்  (SJICSR) வழக்கமாக நாளொன்றுக்கு 1200 பேர் இதய பரிசோதனை செய்யப்படும் நிலையில் திங்கள் கிழமையன்று 1600 பேர் இதய பரிசோதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதைப் போலவே இப்போது கர்நாடகாவில் கண் தானம் செய்வதும் அதிகமாகியுள்ளதாம். புனித் கண்தானம் செய்திருந்த நிலையில் அதன் மூலம் நான்கு பேருக்கு பார்வை கிடைத்தது. இந்நிலையில் அவரின் ரசிகர்கள் மத்தியிலும் இப்போது கண் தானம் செய்வது அதிகமாகியுள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்