சூர்யா, ஜோதிகாவை வணங்குகிறேன் - பார்த்திபன் டுவீட்

வெள்ளி, 5 நவம்பர் 2021 (15:12 IST)
நடிகர் சூர்யா நடிப்பில், த.செ. ஞானவேல் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ஜெய்பீம். இப்படம் நல்லவரவேற்பை பெற்றுள்ள நிலையில், நடிகர்களும், பிரபல இயக்குநர்களும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் ஜெய்பீம் படத்தைப் பார்த்துவிட்டு தனது ஸ்டைலில் சூர்யா, ஜோதிகாவை பாராட்டிள்ளார்.

அதில், ஜெய்பீம் ஒரு கமர்ஷியல் என்று வண்ணம் புசிக் கொள்ளா வண்ணம் உலகளவில் கமர்ஷியலாகவும் வென்றிருக்கும் படத்தைப் பார்த்துக் கரைந்தே போனேன். சினிமா மூலம் சமூகத்திற்கு கோடானு கோடி நன்மை செய்திருக்கும் மாண்புமிகு சூர்யா, ஜோதிகா அவர்களை மானசீகமாக வணங்குகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

pic.twitter.com/dbJPf6GvaJ

— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 5, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்