மும்பையில் தனுஷ் படத்தின் ஷூட்டிங்

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2018 (13:58 IST)
தனுஷ் நடித்துவரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் ஷூட்டிங், மும்பையில் நடைபெற இருக்கிறது. கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. மேகா ஆகாஷ், தனுஷ் ஜோடியாக நடிக்கிறார். ராணா டகுபதி, கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். பல மாதங்களாக நடைபெறாமல் இருந்த படப்பிடிப்பு, கடந்த மாதத்தில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது.
 
பொள்ளாச்சி மற்றும் சென்னை ஈசிஆரில் படப்பிடிப்பு நடத்தியுள்ள கெளதம் மேனன், சில காட்சிகளை மும்பையில் எடுக்கத் திட்டமிட்டுள்ளார். அங்கு ஷூட்டிங் முடிந்தபிறகு மறுபடியும் பொள்ளாச்சியில் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படம், காதலர் தின வார இறுதியில் வெளியாக திட்டமிடப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்